சென்னை: தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத வெளிமாநில மையம் ஒதுக்கப்படாது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் தங்கள் மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுத மையம் அமைக்கப்படும் என கூறியுள்ளார். நீட் தேர்வு கேள்விகளில் தவறு ஏற்படுவதை தடுக்க மொழிப்பெயர்ப்பாளர்பள் கேட்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.