அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும். மாணவர்களை அரசுப்பள்ளியிலேயே சேர்க்க வேண்டும் என்று பெற்றோர்களும் இளைஞர்களும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதனால் பள்ளிகளுக்கு செல்லும் இளைஞர்கள் மாணவர்களின் படிப்புக்கு என்ன தேவை என்பதை அறிந்து அந்த உதவிகளை செய்வதுடன் வளர்ச்சிக்கான ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
கடந்த வாரம் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் பனங்குளம் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் புதிய தலைமை ஆசிரியர் கருப்பையன் பள்ளியின் வளர்ச்சிக்காக "ஆளுக்கொரு ஆலோசனை" என்ற கூட்டத்தை கூட்டினார். கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்களும், இளைஞர்களும் ஆளுக்கொரு ஆலோசனை சொன்னதுடன் அந்த ஆலோசனைகளை செயல்படுத்த களமிறங்கியுள்ளனர்