திருநெல்வேலி:'நெல்லை பல்கலையில் இந்த கல்விஆண்டு முதல், முதுகலை தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு கட்டணமில்லை' என, பதிவாளர் தெரிவித்துஉள்ளார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு அறிக்கை:தமிழ் முதுகலை மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. இதை தடுக்கும் வகையில், நெல்லை பல்கலை தமிழியல் துறையில், இந்த கல்வி ஆண்டு முதல் கட்டணம் கிடையாது. தமிழ் படிக்க விரும்பும் மாணவர்கள் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.