சென்னை : ரம்ஜானுக்காக நாளை(ஜூன் 15) பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் பிறை தெரியாத காரணத்தால், நாளை மறுநாள்(ஜூன் 16) ரம்ஜான் கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்திருந்தார். இதனையடுத்து நாளை பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நாளை பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும், நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.