புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் உள்ள 200 இடங்களை நிரப்புவதற்கான நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் தற்போது நடைபெற்றுவருகிறது.


ஜிப்மர் மருத்துவக் கல்லூரியின் புதுச்சேரி கிளையில் 150 இடங்களுக்கும், காரைக்கால் கிளையில் 50 இடங்களுக்கும் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இதில் 54 இடங்கள் புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 130 நகரங்களில் 291 மையங்களில் நடத்தப்படும் இந்த தேர்வுக்கு 1 லட்சத்து 97 ஆயிரத்து 751 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

காலை, பிற்பகல் என இருகட்டங்களாக நடைபெறும் நுழைவுத் தேர்வில், புதுச்சேரியில் மட்டும் 7 மையங்களில் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

மொத்தமுள்ள 200 இடங்களுக்கான இந்த நுழைவுத் தோவில், 150 இடங்கள் ஜிப்மா புதுச்சேரிக்கும், 50 இடங்கள் ஜிப்மா காரைக்காலுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் கடைசி வாரத்தில் நடைபெற உள்ளது. வகுப்புகள் ஜுலை 4-ஆம் தேதியிலிருந்து தொடங்க உள்ளது.