சென்னை : எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கவுன்சிலிங், இன்று துவங்குகிறது.
தமிழகத்தில், அரசு - தனியார் மருத்துவ கல்லுாரி களில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 5,757 இடங்கள் உள்ளன. இதற்கான தரவரிசை பட்டியலில், 44 ஆயிரத்து, 332 பேர் தகுதி பெற்றுள்ளனர்.முதற்கட்ட மாணவர் சேர்க்கை, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், இன்று துவங்குகிறது. இன்று, சிறப்பு பிரிவினருக்கும், நாளை முதல், 10ம் தேதி வரை, பொது பிரிவினருக்கும் கவுன்சிலிங் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.