தமிழக பள்ளிக் கல்வி துறை இயக்குனராக, ராமேஸ்வர முருகன் நியமிக்கப்பட்டு உள்ளார்.
பள்ளிக் கல்வி அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றதும், தொடக்கக் கல்வி இயக்குனராக இருந்த, இளங்கோவன், பள்ளிக் கல்வி இயக்குனராக, 2017, ஏப்., 26ல், நியமிக்கப்பட்டார். இவர், 14 மாத பணிக்கு பின், நேற்று முன்தினம், ஓய்வு பெற்றார்.புதிய இயக்குனராக, யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு, பள்ளிக் கல்வித் துறையில் எழுந்தது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்ட இயக்குனர், ராமேஸ்வர முருகன், தொடக்கக் கல்வி இயக்குனர், கருப்பசாமி ஆகியோர், முன்னிலை பட்டியலில் இருந்தனர்.இதில், ஏற்கனவே, பள்ளிக் கல்வித் துறை இயக்குனராக இருந்த அனுபவம் பெற்றவர் என்பதால், ராமேஸ்வர முருகன், தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.அவரை, மீண்டும் பள்ளிக் கல்வி இயக்குன ராக நியமித்து, தமிழக பள்ளிக் கல்வித் துறை, நேற்று உத்தரவிட்டுள்ளது.தற்போதைய நிலையில், பள்ளிக் கல்வியில், அமைச்சர் செங்கோட்டையன், முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், செயலர் உதயசந்திரன், முந்தைய இயக்குனர் இளங்கோவன் கூட்டணியில், பெரும் மாற்றங்கள் நடந்துள்ளன.அந்த மாற்றங்களுடன், புதிய திட்டங்களையும் புகுத்த வேண்டும் என்பதால், புதிய இயக்குனருக்கு, பெரும் சவால்கள் காத்திருப்பதாக, பள்ளிக் கல்விவட்டாரங்கள் தெரிவித்தன.