சென்னை : இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கான, 'ரேங்க்' பட்டியல், இன்று வெளியாகிறது.


அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு படிப்பில், மாணவர்களை சேர்க்க, ஆன்லைன் கவுன்சிலிங் நடத்தப்பட உள்ளது. இந்த ஆண்டு, கவுன்சிலிங்கில் பங்கேற்க, 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில், 1.10 லட்சம் பேர் மட்டும், சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றுள்ளனர். 


இந்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல், இன்று வெளியாகிறது. சென்னை அண்ணா பல்கலையில் நடக்கும் நிகழ்ச்சியில், உயர்கல்வி அமைச்சர், அன்பழகன், காலை, 8:30 மணிக்கு தரவரிசை பட்டியலை வெளியிடுகிறார். தொடர்ந்து, ஆன்லைன் கவுன்சிலிங் துவங்கும் தேதியை, அவர் அறிவிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.