விரைவில் அறிவிப்பு!இட ஒதுக்கீடு அடிப்படையில், அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பான மத்திய அரசின் திட்டத்திற்கு, உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது;
இது, மாநில அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.ராம்விலாஸ் பஸ்வான்மத்திய உணவுத் துறை அமைச்சர், லோக் ஜன சக்திகாவி மயமாக்கும் செயல்!அதிகாரிகள் நியமனத்தில், மத்திய, பா.ஜ., அரசின் நடவடிக்கை, மிகவும் தவறானது. துறைசார் நிபுணத்துவம் பெற்றவர்களை, இணைச் செயலர்களாக நியமிப்பதன் மூலம், அரசு அலுவலகங்களை, காவி மயமாக்கும் பணி நடக்கிறது.வீரப்ப மொய்லிமுன்னாள் மத்திய அமைச்சர், காங்.,திட்டமிட்ட சதி!நான், உ.பி., முதல்வராக இருந்த போது, அரசு பங்களாவில் தங்கியிருந்தேன். தற்போது, அதை மீண்டும் அரசிடம் ஒப்படைத்துவிட்டேன். அந்த வீட்டிலிருந்த ஏராளமான பொருட்கள் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது; இது, எனக்கு எதிரான, பா.ஜ.,வின் திட்டமிட்ட சதி.அகிலேஷ் யாதவ்உ.பி., முன்னாள் முதல்வர், சமாஜ்வாதி