கோபி: ''ஆசிரியர் கவுன்சிலிங், ஒளிவு மறைவின்றி, வெளிப்படை தன்மையோடு நடக்கிறது,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம், கோபியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:முதல்வர் மற்றும் துணை முதல்வர் தலைமையில், பள்ளிக்கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறோம். தமிழகத்தில், ஆசிரியர் கவுன்சிலிங், ஒளிவு மறைவின்றி, வெளிப்படை தன்மையோடு நடக்கிறது.

ஆசிரியர் கவுன்சிலிங் முறையில், பிறர் குற்றச்சாட்டு கூறாத வகையில், கல்வித் துறை சாதனை படைத்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலம் கருதி, சிறந்த கல்வியாளராக மட்டுமல்லாமல், ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை உருவாக்க, இந்த அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாணவர்களுக்கு உடனடியாக பஸ் பாஸ் கிடைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்று அவர் கூறினார்.