தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில், 650க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன.
இந்த கல்லுாரிகளில், பி.எட்., மற்றும் எம்.எட்., இரண்டாண்டு படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஆண்டுக்கான, பி.எட்., கவுன்சிலிங்கில் பங்கேற்க, இன்று முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும், 13 கல்லுாரிகளில், 30ம் தேதி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.
இந்நிலையில், பல்கலை பதிவாளர் ரவீந்திரநாத் தாகூர் நேற்று, பி.எட்., கல்லுாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:சுயநிதி கல்வியியல் கல்லுாரிகளில், காலியாக உள்ள முதல்வர் பணியிடத்தை, உடனே நிரப்பி, ரும், 29க்குள், பல்கலை ஒப்புதலை பெற வேண்டும்.அனைத்து பாடப்பிரிவுகளுக்கும், தனித்தனியே ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆசிரியர்கள் நியமிக்கப்படாத பாடப்பிரிவுகளில், மாணவர்களை சேர்க்க்க் கூடாது.நடப்பு, 2018 - 19ம் கல்வி ஆண்டில், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு, 'பயோமெட்ரிக்' கருவி வருகைப் பதிவை, கட்டாயமாக்க வேண்டும்.பி.எட்., வகுப்பில், ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும், 25 மாணவர்களுக்கு மேல் சேர்க்கக் கூடாது. தனியார் கல்லுாரி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் மாத ஊதியத்தை, அவர்களின் வங்கி கணக்கு வழியாக வழங்க வேண்டும்.அரசு வழங்கியுள்ள நெறிமுறைகளை, மாணவர் சேர்க்கை மற்றும் ஆசிரியர் நியமனங்களில் கடைபிடிக்க வேண்டும். மீறும் கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கைக்கு, பல்கலை அனுமதி கிடைக்காது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.