சென்னை: தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதால் நாளை பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

இஸ்லாமிய பெருமக்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு மேற்கொள்கின்றனர். நோன்பு முடிவை அடுத்து பிறை பார்த்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

இந்த ஆண்டுக்கான ரம்ஜான் திருநாள் நாளை கொண்டாடப்படும் என தகவல் வெளியானது. இதையடுத்து தமிதழகத்தில் உள்ளஅனைத்து பள்ளிகளுக்கும் தமிழக அரசு நாளை விடுமுறை அறிவித்தது.

ஆனால் தமிழகத்தில் சனிக்கிழமைதான் ரம்ஜான் கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாளை அறிவித்த விடுமுறையை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. அதற்கு பதிலாக வரும் சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.