Wednesday, June 27, 2018

கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பணிமூப்பு பட்டியலில் குளறுபடி?

தமிழகத்தில் கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு பணிமூப்பு பட்டியலில்,

ஏராளமான குளறுபடிகள் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.கல்வித்துறையில் டி.இ.ஓ., நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், இருக்கை கண்காணிப்பாளர். உதவியாளர், இளநிலை உதவியாளர் உட்பட 7000க்கும் மேற்பட்ட ஆசிரியர் அல்லாத பணியாளர் உள்ளனர். இவர்களுக்கு காலி பணியிடங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு ஆண்டும் பதவி உயர்வு வழங்கப்படும்.இதற்காக ஆண்டுதோறும் பல்வேறு பிரிவுகளில் பதவி உயர்வு, பணி மூப்பு பட்டியல் தயாரித்து வெளியிடப்படும்.
இந்தாண்டுக்குரிய பட்டியல் 15.3.2018 வெளியிடப்பட்டது. இதில் பல குளறுபடிகள் உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.இதுகுறித்து கல்வி அலுவலர்கள் கூறியதாவது:பதவி உயர்வு பணிமூப்பு பட்டியலில் 2017ல் இடம் பெற்றிருந்த பலரின் பெயர் 2018 பட்டியலில் இடம்பெறவில்லை. மேலும் முன்னுரிமை பட்டியலில் பெயர் இடம் பெற தகுதியாக 2017ல் துறைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற நாள் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் இந்தாண்டு பணிவரன்முறை செய்யப்பட்ட நாள் தகுதியாக எடுக்கப்பட்டது.பதவி உயர்வு மற்றும் பணி மாறுதலின்போது 'விருப்பம் இல்லை,' என எழுதி கொடுத்தவர் பெயரை மூன்று ஆண்டுகள் வரை பட்டியலில் சேர்க்க கூடாது.

ஆனால் ஒன்று, இரண்டு ஆண்டுகளே ஆன பலரின் பெயர் பணிமூப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதுபோன்ற குளறுபடிகளை நீக்கி பதவி உயர்வு வழங்க வேண்டும், என்றனர்.

No comments:

Post a Comment

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!