மதுரை : 'நீட்'தேர்வு மாநில தரவரிசை பட்டியல் இன்று(ஜூன் 28) வெளியாகும் என தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில்தெரிவித்தது.

நீட் வழக்கு விசாரணையின் போது தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞர் தெரிவிக்கையில், அகில இந்திய அளவில் 15 சதவீத ஒதுக்கீட்டிற்கான தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டது. மாநில ஒதுக்கீட்டிற்கான (85 சதவீதம்) தரவரிசை பட்டியலை இன்று (ஜூன்28) தேர்வுக்குழுவெளியிடுகிறது. ஜூலையில் மாணவர் சேர்க்கை துவங்கும் என்றார்.