ஓய்வூதியம் பெறுவோர், தங்கள் கோரிக்கையை தெரிவிக்க, மாவட்ட கருவூல அலுவலகங்களுக்கு செல்கின்றனர்.
இவர்கள் நேரில் சென்று சிரமப்படுவதை தவிர்க்க, கருவூல கணக்குத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இதுகுறித்து, கருவூல கணக்குத்துறை இயக்குனர், முனியநாதன், மாவட்ட கருவூல அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கை:ஓய்வூதியதாரர்களுக்கு சென்று சேர வேண்டிய விபரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். ஒவ்வொரு மாதமும், 'அப்டேட்' செய்யப்பட வேண்டும். மேலும், மாவட்ட கருவூல அளவிலும், ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் அளவிலும், புதன் தோறும் குறைகேட்பு நடத்த வேண்டும். மனுக்களை பெற்று, நடவடிக்கை மேற்கொண்ட விபரங்களை, தனி பதிவேடுகளில் பராமரிக்க வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.