சென்னை: உதவி பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்வான, 'நெட்' நேற்று நாடு முழுவதும் நடந்தது.
உதவி பேராசிரியர் பணியில் சேர்வதற்கான, நெட் தகுதி தேர்வு, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., யால் அறிவிக்கப்பட்டுள்ளது. யு.ஜி.சி.,யின் சார்பில், இந்தத் தேர்வை, சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரியம் நேற்று நடத்தியது. நாடு முழுவதும், 91 நகரங்களில், 2,082 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம், 84 பாடப்பிரிவுகளுக்கு, 11.48 லட்சம் பேர் பங்கேற்றனர்.இதுவரை மூன்று தாள்களுக்கு தேர்வு நடத்தியதை மாற்றி, இம்முறை ஒரு பொது பாடம் மற்றும் ஒரு விருப்ப பாடத்துக்கு மட்டுமே தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வில், முன்னிலை பெறும், 6 சதவீதம் பேர், தேர்ச்சி பெறுவோராக அறிவிக்கப்படுவர்.