பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2018மார்ச்/ஏப்ரல் மாதங்களில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல் அந்தந்தப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளது.

தனித் தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்களிலேயே தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.