Tuesday, July 17, 2018

வரலாற்றில் இன்று ஜூலை 18-07-2018

சூலை 18 (July 18) கிரிகோரியன் ஆண்டின் 199 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 200 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 166 நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்

64 – ரோமில் பெரும் தீ பரவி நகரின் வர்த்தக மையத்தில் பெரும் சேதம் ஏற்பட்டது. அப்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று சொல்லப்படுகிறது.

362 – ரோம-பாரசீகப் போர்கள்: பேரரசர் யூலியன் 60,000 உரோமைப் போர் வீரர்களுடன் அந்தியோக்கியாவை அடைந்து அங்கு ஒன்பது மாதங்கள் தங்கியிருந்து பாரசீகப் பேரரசுடன் போரிட்டார்.

1290 – இங்கிலாந்துப் பேரரசர் முதலாம் எட்வர்டு இங்கிலாந்தில் உள்ள அனைத்து யூதர்களையும் வெளியேற உத்தரவிட்டார்.

1389 – நூறாண்டுப் போர்: பிரான்சும் இங்கிலாந்தும் அமைதி உடன்பாட்டை எட்டின. அடுத்த 13 ஆண்டுகள் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவியது.

1391 – மங்கோலியப் பேரரசர் தைமூர் தங்க நாடோடிகளின் தோக்தமிசை கந்தூர்ச்சா ஆற்றுச் சமரில் (இன்றைய தென்கிழக்கு உருசியா) தோற்கடித்தார்.

1812 – ஆங்கிலோ-உருசிய, மற்றும் ஆங்கிலோ-சுவீடியப் போர்கள் முடிவுக்கு வந்தன.

1872 – ஐக்கிய இராச்சியத்திலும் அயர்லாந்திலும் நாடாளுமன்ற, உள்ளூராட்சித் தேர்தல்களில் இரகசிய வாக்கெடுப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.

1916 – யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பெரும் சூறாவளியில் பலர் உயிரிழந்தனர். வீடுகள், மற்றும் பல தொலைத்தொடர்பு சாதனங்கள் சேதமடைந்தன.

1925 – இட்லரின் புகழ் பெற்ற மெயின் கேம்ப் வெளியிடப்பட்டது

1942 – இரண்டாம் உலகப் போர்: நோர்வேயில், யுகொசுலாவியப் போர்க் கைதிகள் 288 பேர் படுகொலை செய்யப்பட்டனர்

1944 – இரண்டாம் உலகப் போர்: போரில் ஏற்பட்ட பல தோல்விகளை அடுத்து சப்பானியப் பிரதமர் இதெக்கி டோஜோ பதவியைத் துறந்தார்.

1966 – மனித விண்வெளிப்பறப்பு: நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது.

1968 – இன்டெல் நிறுவனம் மவுண்டன் வியூ, கலிபோர்னியாவில் நிறுவப்பட்டது.

1976 – 1976 ஒலிம்பிக் போட்டியில் நாடியா கொமனட்சி ஒலிம்பிக் வரலாற்றில் சீருடற்பயிற்சிகள் போட்டியில் முழுமையான 10 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.

1977 – வியட்நாம் ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.

1982 – குவாத்தமாலாவில் பெண்கள், குழந்தைகள் உட்பட 268 பழங்குடியினர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

1984 – கலிபோர்னியாவில் மெக்டொனால்ட்சு உணவகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் 21 பேர் கொல்லப்பட்டனர் 19 பேர் படுகாயமடைந்தானர்.

1994 – அர்கெந்தீனாவில் புவெனசு ஐரிசு நகரில் யூத சமூக மையம் ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 85 பேர் கொல்லப்பட்டனர், 300 பேர் காயமடைந்தனர்.

1994 – ருவாண்டா இனப்படுகொலை: ருவாண்டன் நாட்டுப்பற்று முன்னணியினர் ருவாண்டாவின் வடமேற்குப் பகுதியைக் கைப்பற்றினர். இடைக்கால அரசு சயீருக்குத் தப்பியோடியது. இனப்படுகொலை முடிவுக்கு வந்தது.

1995 – கரிபியன் தீவான மொன்செராட்டில் சௌபியரே எரிமலை வெடித்துச் சிதறியதன் காரணமாக ‎தீவின் தலைநகரம் அழிக்கப்பட்டதுடன் மண்டலத்தின் மக்கட்தொகையின் மூன்றில் இரண்டு பகுதியினர் தீவை விட்டு வெளியேறினர்.

1996 – ஓயாத அலைகள் ஒன்று: முல்லைத்தீவு இலங்கைப் படைமுகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டது. 1200 படையினர் கொல்லப்பட்டனர்
.
1997 – மும்பையில் 10 சிறுவர்கள் காவற்துறையினரால் கொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் சுமார் 8000 தலித் மக்கள் கலகத்தில் ஈடுபட்டனர்.

2007 – மும்பையில் ஏழு மாடிக் கட்டிடம் உடைந்து வீழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்தனர்.

2013 – அமெரிக்காவின் டிட்ராயிட் மாநில அரசு, $20 பில்லியன் கடனுடன், திவாலா நிலை யை அடைந்தது.

பிறப்புகள்

1852 – பால் கேரஸ், செருமானிய அமெரிக்க எழுத்தாளர், மெய்யியலாளர் (இ. 1919)

1853 – என்ட்ரிக் லொரன்சு, நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பிலாளர் (இ. 1928)

1893 – ஏ. ஜே. ஜான் ஆனாப்பரம்பில், திருவிதாங்கூர் விடுதலை இயக்கப் போராளி (இ. 1957)

1909 – இரா. கிருஷ்ணன், தமிழ்த் திரைப்பட இயக்குநர் (இ. 1997)

1918 – நெல்சன் மண்டேலா, நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் (இ. 2013)

1919 – ஜெயச்சாமராஜா உடையார், மைசூர் சமஸ்தானத்தின் 25வது, கடைசி அரசர் (இ. 1974)

1926 – யோசுவா ஃபிஷ்மன், யூத அமெரிக்க சமூகவியலாளர், மொழியியலாளர் (இ. 2015)

1927 – மெகுதி அசன், பாக்கித்தானியப் பாடகர் (இ. 2012)

1935 – செயந்திர சரசுவதி, இந்திய ஆன்மிகத் தலைவர், 69வது சங்கராச்சாரியார்

1950 – றிச்சர்ட் பிரான்சன், ஆங்கிலேயத் தொழிலதிபர்

1950 – யக் லேற்ரன், கனடா அரசியல்வாதி (இ. 2011)

1967 – வின் டீசல், அமெரிக்க நடிகர், இயக்குநர்

1971 – சௌந்தர்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2004)

1975 – மாதங்கி அருள்பிரகாசம், ஆங்கிலேய--ஈழ ராப் இசைக் கலைஞர்

1978 – ஜோ சாங்-வூக், தென்கொரிய நடிகர்

1980 – கிறிஸ்டன் பெல், அமெரிக்க நடிகை, பாடகி

1982 – பிரியங்கா சோப்ரா, இந்திய நடிகை

1985 – சாஸ் கிராஃபோர்ட், அமெரிக்க நடிகர்

சிறப்பு நாள்

நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள்

No comments:

Post a Comment

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!