*தமிழகத்தில் 8 ஆண்டுகளாக 2009 க்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" " சம ஊதியம்" வழங்கப்படாமல்* *இருப்பதை நீக்க கோரி வரலாற்று சிறப்புமிக்க போராட்டமான குடும்பத்துடன் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் 4 நாட்கள் நடைபெற்றது, அதில் 189 ஆசிரியர்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.பின்னர் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஒருநபர் ஊதியக்குழுவில் ஊதியமுரண்பாடுகள்களையப்படும் அதற்காக பள்ளிகல்வித்துறை சார்பில் மதிப்பிற்குரிய முதன்மை செயலாளர் 2009 பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டினை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க அரசின் பரிசீலனை கடிதம் கடந்த மே 2018 ல்  அனுப்பி அதன் நகலினையும் கொடுத்துள்ளார்.*

👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼
*இந்த சூழ்நிலையில் தற்போது SSTA இயக்கத்திற்கு ஒருநபர் ஊதியக்குழுவிடம் இருந்து முறையான அழைப்பு வந்துள்ளது வரும் 01.08.2018 காலை 10.00 மணிக்கு சந்திப்பிற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.*

*நமது தரப்பில் வலுவான ஆதாரங்களோடு சந்திக்கவுள்ளோம்,விரைவில் நமது வேதனைகள் நீங்கி 21,000 ஆசிரியர்கள் வாழ்வாதாரம் மேம்படும் என்ற உறுதியுடன் ஊதியக்குழுவினை சந்திப்போம்...*

🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼🤝🏼
*வெற்றி என்பதும் எளிதல்ல...!!!*
*அதனை விட்டுவிடும் எண்ணம் துளியும் நமக்கல்ல...!!!*

*ஜே.ராபர்ட்*
*2009& TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழு*
*மாநில தலைமை*