Thursday, July 26, 2018

3,000 பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் 30 ஆயிரம் மாணவர்களுக்கு கையடக்க கணினி

சென்னை, அரசு பள்ளி மாணவர்கள், 30 ஆயிரம் பேருக்கு, 'டேப்லட்' எனப்படும், கையடக்க கணினிகள் வழங்கப்பட உள்ளன. மேலும், 3,000 பள்ளிகளில், டிஜிட்டல் பலகையுடன், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன.
அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் கல்வித்தரத்தை உயர்த்த, பல்வேறு திட்டங்களை, தமிழக பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்து வருகிறது.இதன்படி, 3,000 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், மூன்று மாதங்களில், டிஜிட்டல் பலகையுடன், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன.பாடங்களை ஒளிபரப்ப, தலா ஒரு புரஜக்டர் வழங்கப்படும். மேலும், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு, 3,000, 'டேப்லட்'கள் வழங்கப்படும்.இதற்கான நடவடிக்கைகளை, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி சேவை பணிகள் கழகம் மேற்கொண்டுஉள்ளது. இவற்றுடன், ஒரு பள்ளிக்கு, 10 மாணவர் வீதம், மொத்தம், 30 ஆயிரம் பேருக்கு, 'டேப்லட்' என்ற, கையடக்க கணினி இலவசமாக வழங்கப்பட உள்ளது.இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள், இன்னும், 90 நாட்களில் அனைத்து பள்ளிகளிலும் இயங்க துவங்கும்; ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நவீன தொழில்நுட்பத்தில் பாடங்கள் நடத்தப்படும்.சென்னை உட்பட, எந்த முக்கிய நகரங்களில் இருந்தும், கல்வியாளர்கள், கல்வித்துறை அதிகாரிகள், 'டேப்லட்' பயன்படுத்தி, 'வீடியோ கான்பரன்சிங்' முறையில், ஸ்மார்ட் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு, பாடம் நடத்த முடியும்.இந்த ஸ்மார்ட் வகுப்பில், ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில், 'ரைம்ஸ்' என்ற, பள்ளி குழந்தைகளுக்கான பாடல்கள், ஒழுக்க நெறி கதைகள் போன்றவையும், வீடியோவாக வழங்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiw



thank you!