டெல்லி: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.


2018 பிப்ரவரி 11ஆம் தேதி தமிழகத்தில் குரூப் 4 தேர்வை 17 லட்சத்து 52 ஆயிரத்து 882 பேர் எழுதினர். கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் உள்பட மொத்தம் 9,351 பணியிடங்களுக்கான தேர்வு இது.

301 தாலுகாக்களில் 6,962 மையங்களில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. குரூப் 4 தேர்வுப் பணிகளில் தமிழகம் முழுவதும் 1.25 லட்சம் ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

அனைத்துத் தேர்வுக் கூடங்களும் விடியோ பதிவு செய்யப்பட்டன.

இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று மாலை, டிஎன்பிஎஸ்சி வெப்சைட்டில் வெளியாகியுள்ளது. http://www.tnpsc.gov.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்ற வெப்சைட்டில், தேர்வு எழுதியவர்கள் ரிசல்ட் பார்த்துக்கொள்ளலாம்