இருசக்கர வாகனங்களில் இருவர் சென்றால் கட்டாயமாக ஹெல்மேட் அணிய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாலை விபத்துகளை தடுக்க காரில் சீட் பெல்ட் அணிவதும், இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிவதும் கட்டாயம் என்பது தொடர்பான வழக்கை இன்று விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இந்த தீர்ப்பில் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மேட் அணிய வேண்டும் என்றும், காரில் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும் அதிரடியாக கூறியுள்ளது. இந்த விதிமுறைகளை வரும் 27ம் தேதிக்குள் கட்டாயமாக்கி சட்டம் பிறப்பிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டியிருப்பதை உறுதி செய்யவும். இருசக்கர வாகனங்களில் பகல் நேரங்களில் எல்இடி விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.