பிளஸ் டூ-வில் "ஸ்கில் டிரெய்னிங்" என்ற புதிய பாடத்திட்டம் சேர்க்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருச்சி காந்தி மார்க்கெட் அருகே அரசுப் பள்ளி கூடுதல் கட்டிட திறப்பு விழாவில் அவர் பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், அந்தந்த பகுதிகளில் உள்ள தொழில்களை மனதில் கொண்டு புதிய பாடத் திட்டம் வரும் கல்வி ஆண்டில் சேர்க்கப்படும் எனத் தெரிவித்தார்.