சிவகங்கை: பள்ளிகள் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் இணைவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் 57 ஆயிரத்து 583 பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கழகம் செயல்பட்டு வருகின்றன. பெற்றோர் தலைவராகவும், தலைமைஆசிரியர்கள் செயலர்களாகவும் செயல்படுகின்றனர். பள்ளி வளர்ச்சியை மேம்படுத்துதல், மாணவர்கள் சேர்க்கையை அதிகரித்தல் போன்ற பணிகளை செய்கின்றனர். அவை தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் இணைந்து செயல்படுகின்றன. 

2018--19 கல்வியாண்டு முதல் இதற்கான கட்டணம் மற்றும் இதழ் சந்தா, தொடக்கப் பள்ளிக்கு 160 ல் இருந்து 210 ஆகவும், நடுநிலைப் பள்ளிக்கு ரூ.210 ல் இருந்து 285, உயர்நிலைப் பள்ளிக்கு 460 ல் இருந்து 860, மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.660 ல் இருந்து 1,260ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 57 ஆயிரத்து 583 பள்ளிகளிடம் இருந்து 2.36 கோடி ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.