சிவகங்கை, பள்ளிகளில் 'லேப்டாப்' திருடுபோன வழக்கு நிலுவையில் இருப்பதால், 100க்கும் மேற்பட்ட ஓய்வு தலைமைஆசிரியர்கள் பணப்பலன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2011 - --2012 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச 'லேப்டாப்' வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் பல பள்ளிகளில் 'லேப்டாப்கள்' திருடுபோயின. 'அவற்றை பாதுகாக்க தவறிய, அந்தந்த பள்ளி தலைமைஆசிரியர்களே பொறுப்பேற்க வேண்டும்,' என கல்வித்துறை தெரிவித்தது. ஒரு சில இடங்களில் 'லேப்டாப்'களை போலீசார் மீட்டனர். நுாறுக்கும் மேற்பட்ட இடங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை.வழக்கு நிலுவையில் இருப்பதால் மாநிலம் முழுவதும் ஓய்வு பெற்ற 100க் கும் மேற்பட்ட தலைமைஆசிரியர்களுக்கு பணப்பலன் வழங்கவில்லை. குறைந்த அளவில் திருடுபோன இடங்களில் ஓய்வு தலைமைஆசிரியர்களே 'லேப்டாப்களுக்கு' உரிய தொகையை செலுத்தி, பணப்பலனை பெற்றனர். அதிகளவில் மாயமான இடங்களில் பணம் செலுத்த முடியவில்லை. இதனால் அவர்களுக்கு பணப்பலன் கிடைக்கவில்லை.தலைமைஆசிரியர்கள் கூறுகையில், 'இரவு காவலர் இல்லாத பள்ளிகளில் தான் 'லேப்டாப்கள்' திருடுபோகின. இதற்கு ஓய்வுபெறும் தலைமைஆசிரியர்களின் பணப்பலனை நிறுத்தி வைப்பது தேவையற்றது. பாதிக்கப்பட்ட ஓய்வு தலைமைஆசிரியர்களுக்கு பணப்பலன் வழங்க வேண்டும்,' என்றனர்.சிவகங்கை, ஜூலை 20--பள்ளிகளில் 'லேப்டாப்' திருடுபோன வழக்கு நிலுவையில் இருப்பதால், 100க்கும் மேற்பட்ட ஓய்வு தலைமைஆசிரியர்கள் பணப்பலன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2011 - --2012 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச 'லேப்டாப்' வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் பல பள்ளிகளில் 'லேப்டாப்கள்' திருடுபோயின. 'அவற்றை பாதுகாக்க தவறிய, அந்தந்த பள்ளி தலைமைஆசிரியர்களே பொறுப்பேற்க வேண்டும்,' என கல்வித்துறை தெரிவித்தது. ஒரு சில இடங்களில் 'லேப்டாப்'களை போலீசார் மீட்டனர். நுாறுக்கும் மேற்பட்ட இடங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை.வழக்கு நிலுவையில் இருப்பதால் மாநிலம் முழுவதும் ஓய்வு பெற்ற 100க் கும் மேற்பட்ட தலைமைஆசிரியர்களுக்கு பணப்பலன் வழங்கவில்லை. குறைந்த அளவில் திருடுபோன இடங்களில் ஓய்வு தலைமைஆசிரியர்களே 'லேப்டாப்களுக்கு' உரிய தொகையை செலுத்தி, பணப்பலனை பெற்றனர். அதிகளவில் மாயமான இடங்களில் பணம் செலுத்த முடியவில்லை. இதனால் அவர்களுக்கு பணப்பலன் கிடைக்கவில்லை.தலைமைஆசிரியர்கள் கூறுகையில், 'இரவு காவலர் இல்லாத பள்ளிகளில் தான் 'லேப்டாப்கள்' திருடுபோகின. இதற்கு ஓய்வுபெறும் தலைமைஆசிரியர்களின் பணப்பலனை நிறுத்தி வைப்பது தேவையற்றது. பாதிக்கப்பட்ட ஓய்வு தலைமைஆசிரியர்களுக்கு பணப்பலன் வழங்க வேண்டும்,' என்றனர்.