இன்று (30.07.18) அரசு தரப்பு வழக்கறிஞர் (Govt Pleader) தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில்,  உ.நி.பள்ளி த.ஆ பதவி உயர்வு வழக்கு விசாரணைக்கு வந்தது


பள்ளிக் கல்விதுறை  செயலர், பள்ளிக்கல்வி இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் (P) ஆகியோர் அரசு தரப்பில் வந்திருந்தனர்.
எதிரணி தரப்பில் அஜ்மல் வாதிட்டார். *அரசு தரப்பில்  GOVT PLEADER வாதிட்டார்.*
*பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் சார்பில் எந்த சங்கத்தின் சார்பாகவும் இன்று வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை.*

*முடிவாக இதில் வழக்கு தொடுத்துள்ள 4 பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் பணியிடங்களை  காத்திருக்க வைத்து விட்டு மற்ற பணியிடங்களை உடனடியாக நிரப்பிட  மேன்மை பொருந்திய மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. STATUS QUO  விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது*

நம் சங்கத்தின் தொடர் வலியுறுத்துதல் காரணமாக விரைந்து நடவடிக்கை எடுத்த மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களுக்கும் பள்ளிக்கல்வி செயலர் அவர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களுக்கும்  இணை இயக்குனர்(P) அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி