பவானிசாகர்: ''தமிழகத்தில் காலியாகவுள்ள, 1,250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், பவானிசாகரில், அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள, 1,250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது குறித்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.