சென்னை, தனி தேர்வர்களுக்கான பிளஸ் 2 துணை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார்.
செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 4 வரை துணைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேர்வு கால அட்டவணை மற்றும் விண்ணப்பதாரர்களுக்கான விபரம் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் வரும் 27 முதல் செப்., 1 வரை தேர்வு துறை சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். தவறினால் தத்கல் முறையில் செப்., 3 மற்றும் 4ம் தேதிகளில் 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்.இந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய முறையில் ஒவ்வொரு பாடத்திற்கும் தலா 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. பழைய முறையில் கடந்த ஆண்டு வரை தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் இந்த செப்டம்பர் தனித் தேர்வு மற்றும் மார்ச்சில் நடக்கும் பொது தேர்வுகளில் மட்டுமே பங்கேற்க முடியும்.அதன்பின், பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் நேரடியாக பிளஸ் 2 தனித்தேர்வை எழுத முடியாது. பிளஸ் 1 தேர்வை எழுதிய பிறகு தான் பிளஸ் 2 தேர்வில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.