காமராஜர் விருதுக்கு, மாவட்ட வாரியாக, 10ம் வகுப்பு , பிளஸ் 2 மாணவர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது.


 தமிழகத்தில், தமிழ் வழியில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 படித்த மாணவர்களில், மாவட்டத்தில் சிறந்து விளங்கும், 20 பேர் வீதம், தேர்வு செய்து, பரிசுத்தொகையுடன், காமராஜர் விருது வழங்கப்படவுள்ளது.அதற்காக, மாவட்ட வாரியாக, விபரம் திரட்டும் பணி நடக்கிறது. அனைத்து உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு, படிவம் வழங்கப்பட்டுள்ளது.

   அதில், பொதுத்தேர்வு மதிப்பெண்கள், 60, இதர திறன்கள் மற்றும் நடவடிக்கைக்கு, 100 மதிப்பெண்கள் என, மதிப்பீடு செய்து, ஒவ்வொரு பள்ளிகளில், அதிக மதிப்பெண் பெற்ற மூன்று மாணவர்களின் விபரங்களை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

  மாவட்ட அளவில், சிறந்து விளங்கிய, 10ம் வகுப்பில், 20 மாணவர்கள்; பிளஸ் 2வில், 20 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தலா, 10 ஆயிரம் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது