பவானிசாகர்: ''தமிழகத்தில் காலியாகவுள்ள, 1,250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்,
'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம், பவானிசாகரில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: அத்திக்கடவு - அவினாசி திட்டத்தில், தற்போது மதிப்பீடு தயாரிக்கும் பணி நடக்கிறது. கூடுதலாக குளங்கள் மற்றும் குட்டைகளை திட்டத்தில் சேர்க்கும் வகையில், நடவடிக்கை எடுக்கப்படும். பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் குறித்து, ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் குழு நியமிக்கப்பட்டு ஆய்வுப்பணி நடந்து வருகிறது.தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள, 1,250 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவது குறித்து, மதுரை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், அரசுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ளது. விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்ப, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.