ஆன்லைன் நீட்,தேர்வு,முடிவை,கைவிட்டது,அரசு

புதுடில்லி : 'நீட்' எனப்படும், மருத்துவ நுழைவு தேர்வை, ஆண்டுக்கு 2 முறை, 'ஆன்லைனில்' நடத்தும் முடிவை, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை கைவிட்டுள்ளது.


ஆன்லைன் நீட்,தேர்வு,முடிவை,கைவிட்டது,அரசு

'ஆண்டுக்கு இரு முறை தேர்வு நடத்துவதால், 

மாணவர்களுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படும்' என, மனிதவள மேம்பாட்டு துறைக்கு, சுகாதார அமைச்ச கம் கடிதம் எழுதியது. 'ஆன்லைனில் தேர்வு நடத்து வதால், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப் படுவர்'என்றும், சுகாதார அமைச்சகம் கவலை தெரிவித்தது.

இதையடுத்து, இறுதி முடிவு செய்யப்படாத தேர்வு அட்டவணையை, மனிதவள மேம்பாட்டுதுறை, சமீபத்தில் வெளியிட்டது. அந்த பட்டியல் அடிப்படை யில், 2019, மே மாதம், என்.டி.ஏ.,வால் நடத்தப்படும் தேர்வுகளின் இறுதி பட்டியலை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நேற்று வெளி யிட்டது. இதன் படி, ஆண்டுக்கு இரு முறை,

ஆன்லைனில் தேர்வு நடத்தும் முடிவு கைவிட பட்டுள்ளது. புதிய அட்டவணைப்படி, 2019, மே, 5ல், 'நீட்' தேர்வு நடக்கவுள்ளது.