சென்னை: ஊதிய முரண்பாடுகளைக் களைவதற்காக அமைக்கப்பட்ட, ஒரு நபர் கமிட்டி, அறிக்கை தாக்கல் செய்ய, மேலும், மூன்று மாதங்கள் கால அவகாசம் கேட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட பின், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைக் களைய, நிதி செலவினம் துறை செயலர் சித்திக் தலைமையில், பிப்ரவரி மாதம், ஒரு நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டி, தன் பரிந்துரைகளை, ஜூலை, 31க்குள், அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டிருந்தது.ஆனால், இன்னமும் விசாரணை முடிவடையாததால், அறிக்கை தாக்கல் செய்ய, மேலும் மூன்று மாதங்கள், கால அவகாசம் கேட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையில் நேற்று, பல்வேறு ஆசிரியர் அமைப்புகளின் நிர்வாகிகள், ஒரு நபர் கமிட்டி தலைவர், சித்திக்கை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.