சென்னை:கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பதவியை, வட்டார கல்வி அதிகாரியாக மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளி கல்வித்துறையில், பல அதிகாரிகள் பணியிடங்களை மாற்றியமைத்து, சமீபத்தில், தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, மாவட்ட கல்வி அதிகாரிகளின் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டது. தொடக்க கல்வி, ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் பள்ளிகளுக்கான, மாவட்ட அதிகாரிகள் பதவிகலைக்கப்பட்டது.
உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்கள், வட்டார கல்வி அதிகாரிகளாக மாற்றப்பட்டன. ஆனால், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்கள் கலைக்கப்படாமல் இருந்தன.அரசாணையில், அவர்களின் பதவி இல்லாததால், கருவூலத்துறையில், உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைஏற்பட்டது.

இதையடுத்து, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பதவியும், வட்டார கல்வி அதிகாரிகள் பதவிக்கு நிகரானது என, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.