சென்னை:பி.ஆர்க்., படிப்புக்கு, இன்று நேரடி கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 50க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், பி.ஆர்க்., என்ற, கட்டடவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங் இன்று நடத்தப்படுகிறது. 


இந்த கவுன்சிலிங்கிற்கு, இந்த ஆண்டு, 1,824 பேர், 'ஆன்லைனில்'விண்ணப்பித்தனர். அவர்களில், 1,600 பேர் விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இவர்களுக்கு, ஒற்றை சாளர முறையிலான கவுன்சிலிங், இன்று அண்ணா பல்கலை வளாகத்தில் நடக்கிறது.