பிரதம மந்திரி நரேந்திர மோடி இந்த பேங்க் சேவையை திறந்து வைத்தார் இது தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 648 கிளைகள் திறக்கப்பட்டுள்ளது.

இது நாட்டின் முக்கிய பேங்க் வலையமைப்பாகும், இது கிராமப்புற மட்டத்திலிருந்து இயங்கும்.

1. பேமண்ட்ஸ் பேங்க் என்பது ரிசர்வ் பேங்க் அனுமதியுடன் பேங்க் சேவையாற்றும் நிதி நிறுவனம்.
2. பேமண்ட் பேங்கில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள், ₹1 லட்சம் வரையிலான பணம் டெபாசிட் செய்யலாம்.
3. மற்ற பேங்க் சேவை போன்றே பேமண்ட் பேங்கில் பண பரிவர்த்தனை செய்ய முடியும். கட்டணம் செலுத்த முடியும்.
4. பேமண்ட் வங்கியில் கடனோ, கிரெடிட் கார்டோ பெற முடியாது.
5. பேடிஎம், ஏர்டெல் பேமண்ட் வங்கிக்கு போட்டியாக அஞ்சலகத்தின் பேமண்ட் வங்கி நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் இறங்கி உள்ளது.

6. போஸ்ட் பேமண்ட் வங்கியானது முழுக்க முழுக்க மத்திய அரசால் நடத்தப்படும் பேங்க் சேவை ஆகும்
7. போஸ்ட் பேமண்ட் பேங்கில் சேமிப்பு அக்கவுண்ட் தொடங்கினால், 4% வட்டி வழங்கப்படுகிறது
8. பேமண்ட் வங்கியில் மொபைல் ஆப் மூலம் ஆதார் எண்ணை பயன்படுத்தி அக்கவுண்ட் தொடங்கலாம்
9. அஞ்சலக பேமண்ட் வங்கி சேவை கிராமம் தோறும் கொண்டு சேர்க்கும் விதமாக போஸ்ட்மேன் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது
10. அக்கவுண்டில் உள்ள பணத்தை அஞ்சலக கவுண்டரிலோ, ஏடிஎம் மூலமோ பெற முடியும். எஸ்.எம்.எஸ்., ஐ.வி.ஆர். மூலமும் பண வர்த்தனை செய்யலாம்.