2ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது என்ற உத்தரவு சிபிஎஸ்இயுடன் தமிழக பாடத் திட்டத்துக்கும் பொருந்துமென, வீட்டுப்பாடம் கூடாது என்பது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் விளக்கம் அளித்தார்.


மேலும், 2ம் வகுப்பு வரை வீட்டுப் பாடத்துக்கு தடை விதித்ததை மாநில பாட திட்ட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்புங்கள் என்றார்.