சென்னை:பள்ளி படிப்புக்கான கல்வி உதவி தொகைக்கு, 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

சிறுபான்மையின மாணவர்கள், பள்ளி படிப்பை பாதியில் கைவிடாமல் இருக்க, மத்திய அரசு சார்பில், இடைநிலை கல்வி உதவி தொகை திட்டம் அமலில் உள்ளது. இந்த ஆண்டு, தமிழகத்தில் இருந்து, 1.12 லட்சம் மாணவர்கள், இந்த திட்டத்தில் உதவி தொகை பெற, தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.முஸ்லிம் மாணவர்கள் - 54 ஆயிரத்து, 259 பேர்; கிறிஸ்தவர் - 56 ஆயிரத்து, 682 பேர்; 
சீக்கியர் - 187; பவுத்தர் - 144; ஜெயின் - 1,145; பார்சி - 2 பேர் என, 1.12 லட்சத்து, 419 பேருக்கு உதவி தொகை வழங்கப்பட உள்ளது.
இதற்கு தகுதியான மாணவர்கள், மத்திய அரசின், http://www.scholarships.gov.in/ என்ற இணையதளத்தில் நேரடியாக விண்ணப்பிக்க, அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். வரும், 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, பள்ளிகளுக்கு, அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.