சென்னை: அரசு துறைகளில், இன்ஜினியரிங் பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:அரசு துறைகளில், இன்ஜினியரிங் பணியில் சேருவதற்கான எழுத்து தேர்வு, மே, 20 மற்றும், 27ல் நடந்தது. இதில், 44 ஆயிரத்து, 524 பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. அதன்படி, நேர்காணலுக்கு முந்தைய சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியாவர்கள் பட்டியல், தேர்வாணையத்தின், www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டவர்கள், செப்., 12 முதல், 25 வரை, தங்களின் அசல் சான்றிதழ்களை, அரசு இ -- சேவை மையங்கள் வழியாக, பதிவேற்றம் செய்ய வேண்டும்.அரசு விடுமுறை நாட்களில், இ - சேவை மையங்கள் இயங்காது என்பதால், கடைசி நாள் வரை காத்திருக்காமல், தங்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு, செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.