பண பரிவர்த்தனை செயலிகளில் ஆதார் ஆவணங்களுக்குப் பதிலாக பாஸ்போர்ட், வாக்காளர் ஐடி அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை அடையாள ஆவணங்களாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். Payment apps like Paytm and PhonePe are not letting users submit their Aadhaar numbers for the mandatory know your customer (KYC) process.
பண பரிவர்த்தனை செயலிகளில் ஆதார் ஆவணங்களுக்குப் பதிலாக பாஸ்போர்ட், வாக்காளர் ஐடி அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை அடையாள ஆவணங்களாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
ஆரம்பத்தில் அனைத்து பண பரிவர்த்தனை செயலிகள், அதன் பயனர்கள் ஆதார் வழியாகக் கணக்குகளை சரிபார்க்க வலியுறுத்தி இருந்தது, அந்த நிலை இனி இல்லை.


டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலி
இந்தியாவின் தனித்த (யுஐடிஏஏ) அடையாள ஆணையம் தரவுத்தளத்தை தங்கள் பயனர்களின் ஆவணங்களை சரிபார்க்கப் பயன்படுத்த அனுமதிகிடையாது என்று ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ போன்ற பெரிய பிராண்டுகளுக்கு முன்னர் அடையாள ஆணையம் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயலி நிறுவங்களுக்கும் இந்த அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

RBI விதிமுறை
நீங்கள் பேடியம், போன்பே அல்லது ஃப்ரீ சார்ஜ் போன்ற வழக்கமான பயன்பாட்டு செயலி பயனாளராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு நிச்சயம் இது தெரிந்திருக்கும். RBI விதிமுறைகளின் காரணமாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, தற்பொழுது வரை KYC செயல்முறை செய்யாமல் பணத்தை மாற்றவோ அல்லது செலுத்தவோ முடியாது என்பதே உண்மை.


உறுதி செய்யப்பட்ட மாற்றங்கள்
இந்த மாற்றங்கள் உண்மைதானா என்று நாங்களும் உறுதி செய்துள்ளோம். பேடியம், போன்பே அல்லது பிரீ சார்ஜ் போன்ற வழக்கமான பயன்பாட்டு செயலிகளில் அடையாள ஆவணங்கள் பட்டியலில் ஆதார் நீக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேடியம் செயலி
பேடியம் செயலி இல் ஆதார் நீக்கப்பட்டதற்கான ஆவணம்:

பேடியம் செயலி இல் அடையாள ஆவணங்கள் பட்டியலில் ஆதார் நீக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

போன்பே செயலி
போன்பே செயலி இல் ஆதார் நீக்கப்பட்டதற்கான ஆவணம்:

போன்பே செயலி இல் அடையாள ஆவணங்கள் பட்டியலில் ஆதார் நீக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.