சென்னை : பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான, பி.எட்., சேர்க்கையை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை அறிவித்துள்ளது.


தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் அங்கீகாரம் பெற்று, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்புக்கான சேர்க்கை நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை, நேற்று வெளியிட்டது.இந்த படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், வரும், 11ம் தேதி முதல் கிடைக்கும். இந்த படிப்பில் சேர, பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிபவர்களாகவும், குறைந்தபட்சம், ஒரு பட்ட படிப்பும், 'டிப்ளமா' ஆசிரியர் கல்வியியல் படிப்பும் முடித்திருக்க வேண்டும்.