சிறப்பாசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்:ஜி.கே.வாசன்


தமிழக பள்ளிளில் காலியாக உள்ள சிறப்பாசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை

தமிழகப் பள்ளிகளில் ஓவியம், தையல், இசை உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வை நடத்தியது

 தேர்வு முடிவின் அடிப்படையில் ஓவிய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஒரு பணியிடத்துக்கு 2 பேர் என்ற முறையில் 2,784 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் கல்வித் தகுதி இல்லாமல் போலியாக விண்ணப்பித்தவர்கள் எனத் தெரிய வந்தது

இவற்றைக் கருத்தில் கொண்டு, 6 ஆண்டுகளாக நிரப்பப்படாத சிறப்பாசிரியர் பணியிடங்களை வெளிப்படைத்தன்மையுடனும், குளறுபடிகளுக்கு இடம் இல்லாத வகையிலும், தகுதி உள்ளவர்களை மட்டுமே கொண்டு நிரப்ப வேண்டும் என்று வாசன் கூறியுள்ளார்