ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஆசிரியர் தினம்
புதுடில்லி : ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணனுக்கு மரியாதை செலுத்துகிறேன். நாட்டில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள். நமது சிறந்த ஆசான்கள் நமது தேசத்தை கட்டமைக்க நமக்கு வழிகாட்டட்டும். உலகம் முழுவதும் நல்லறிவு, சமாதானம், இணக்கம் தழைத்தோங்க ஆசிரியர்கள் உதவ வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.