சென்னை, 'மெட்ரிக் பள்ளிகளுக்கான, தொடர் அங்கீகார உத்தரவை, தாமதமின்றி வழங்க வேண்டும்' என, தனியார் பள்ளிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள, 2,000க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகளுக்கு, 2018 மே, 31ல், தற்காலிக தொடர் அங்கீகாரம் முடிந்து விட்டது.இந்த பள்ளிகளுக்கு, இன்னும் ஒரு ஆண்டுக்கான அங்கீகாரத்தை நீட்டித்து வழங்க, தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவிட்டார்.இதன்படி, பள்ளி கல்வி செயலகம், ஒரு மாதத்திற்கு முன், அரசாணை வெளியிட்டது. ஆனால், தற்காலிக தொடர் அங்கீகாரம் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை என, பள்ளிகள் தரப்பில், குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இது குறித்து, தமிழக தனியார் பள்ளிகள் சங்கங்கள் கூட்டமைப்பின் செயலர், இளங்கோவன், பள்ளிக்கல்வித்துறை மற்றும் போக்கு வரத்து துறைக்கு அனுப்பியுள்ள கடிதம்:மெட்ரிக் பள்ளிகளுக்கான, தற்காலிக தொடர் அங்கீகாரம், இன்னும் புதுப்பிக்கப்படவில்லை.இதனால், பள்ளி வாகனங்களுக்கான உரிமம் புதுப்பித்தல், தகுதி சான்று பெறுதல், புதிய வாகனங்களை பதிவு செய்தல்,உரிமம் பெறுதல் போன்ற பணிகள் ஸ்தம்பித்துள்ளன. எனவே, விரைந்து அங்கீகாரம் வழங்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.