விருதுநகர் மாவட்டம்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவியருக்குதீபாவளியை முன்னிட்டு பட்டாசு பார்சல் மற்றும் புத்தாடை வாங்கிக்கொடுத்து பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வைஏற்படுத்தியுள்ளார் தலைமையாசிரியர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டியில் ஊராட்சிஒன்றியத் தொடக்கப் பள்ளி உள்ளது.இப் பள்ளியில் மாணவர் சேர்க்கையைஅதிகப்படுத்த தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ்இலவசமாகயோகாகராத்தேசிலம்பாட்டம் உள்ளிட்ட பயிற்சிகளை அளித்துவருகிறார்.
இங்கு படிக்கும் ஏழைக் குழந்தைகள் கிராமத்தில் கொண்டாடப்படும்பொங்கலுக்கு புத்தாடைகள் எடுத்து கொண்டாடுவார்கள்மேலும்பெற்றோர் அனைவரும் தினக் கூலிகள்தீபாவளிக்கு அரிதாக புத்தாடைஎடுப்பதாக மாணவர்கள் கூறியுள்ளார்கள்.

இதனையடுத்து தனது மாணவ மாணவியருக்கு புத்தாடை மற்றும் பட்டாசுவாங்கிக் கொடுத்து தீபாவளியை அவர்களை சிறப்பாகக் கொண்டாடுவதற்குதலைமை ஆசிரியர் முடிவு செய்து அவர்களுக்கு இவற்றை தனது சொந்தசெலவில் வாங்கிக் கொடுத்துள்ளார்.

இதனை வழங்கும் விழா பள்ளியில் வட்டாரக் கல்வி அலுவலர்கள்கி.சீனிவாசன்கோ.விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்றதுவட்டாரவளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமிபள்ளி மேலாண்மைக் குழுதலைவி கா.மாரீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தார்.
ஆசிரியை கா.ரோஸ்லினா வரவேற்றார்.
மாணவ மாணவியருக்கு கல்வித் துறை அறிவித்துள்ளபடிபாதுகாப்பாகபட்டாசு வெடிப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.பின்னர் அனைத்து மாணவ மாணவியருக்கும் புத்தாடைகள் மற்றும்பட்டாசுகள் வழங்கப்பட்டது.

விழாவில் கல்வி அலுவலர் கி.சீனிவாசன் பேசுகையில்தமிழக தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆகியோர்மாணவர்களுக்கு பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாடுவது குறித்துவிழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும என அறிவுறுத்தியுள்ளார்கள்இதன்பேரில் இப் பள்ளியில் இந்த விழிப்புணர்வு செயல் விளக்கம்நடைபெற்றுள்ளதுகடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கு கல்வித் துறை,தலைமை ஆசிரியர்கள் மூலம் பள்ளிகளில் அளிக்கப்பட்ட தெளிவானஅறிவுரைகளின்படி தீபாவளி விபத்துக்கள் வெகுவாக குறைந்ததுதெரியவந்துள்ளதுமாணவர்கள் முறையாககவனமாக பட்டாசுகளைவெடித்து விபத்துக்கள் அற்றமகிழ்ச்சி நிறைந்த தீபாளியைக் கொண்டாடவேண்டும் எனறார்.

நிகழ்ச்சியில் பெற்றோர்பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார்ஞானராஜ் நன்றி கூறினார்