தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு பத்திரமாக சென்று இருப்பார்களா..?
மீண்டும் பள்ளியில் இருந்து மாலை சரியான நேரத்தில் கிளம்பி விட்டார்களாஎன்றஎண்ணம் இருந்துக்கொண்டே இருக்கும்அந்த வகையில்தற்போதுஇந்த பிரச்சனைக்கு மிக சூப்பர் தீர்வு கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
 
தங்கள் குழந்தைகள் பள்ளிக்கு பத்திரமாக சென்று இருப்பார்களா..?மீண்டும் பள்ளியில் இருந்து மாலை சரியான நேரத்தில் கிளம்பி விட்டார்களாஎன்றஎண்ணம் இருந்துக்கொண்டே இருக்கும்அந்த வகையில்தற்போதுஇந்த பிரச்சனைக்கு மிக சூப்பர் = தீர்வுகண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.பள்ளிசெல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு இன்று கேள்வி குறியாகி உள்ளது.பெற்றோர்கள் மிகவும் வேதனை கொள்ளும் விஷயம் தம் பிள்ளைகள்பாதுகாப்பாக பள்ளிக்கு செல்கிறார்களா என்பதே....பள்ளிகல்விதுறையில்எடுத்த நடவடிக்கையில் தானியங்கி வருகை பதிவு வசதி கொண்டுவரஅடையாள அட்டையில் சிப் பொருத்தப்பட்டுபெற்றோர்களின் மொபைல்எண்ணையும் அதில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.இந்த முறையை சென்னைபோரூரில் உள்ள மகளிர் மேனிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

பள்ளி நுழைவு வாயிலில் ரேடியோ அலைகள் பாய்ந்துக்கொண்டிருக்கும்கருவிகள் வைக்கப்பட்டிருக்கும்இதன் வழியாக அடையாளஅட்டைஅணிந்து செல்லும் மாணவர்களின் வருகை உடனடியாக பதிவு ஆகிவிடும்.

குறுஞ்செய்தி




இதே போன்று மாணவர்களின் வருகையை தெரிந்துக்கொள்ளபெற்றோர்களுக்கு உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது.அடையாள அட்டையுடன் சிப் பொருத்தபபடு மொபைல் எண்ணையும்இணைக்கப்பட்டு உள்ளதால்தங்கள் பிள்ளைகள் பள்ளிக்குள் நுழையும்போது உடனடியாக மெசேஜ் சென்று விடும்அதே போன்று பள்ளிவிட்டவுடன் மாணவர்கள் வெளியில் வரும் போதும் உடனடியாக தானாகவேஒரு மெசேஜ்   பெற்றோர்களின் செல்போன் எண்ணுக்கு சென்றுவிடும்.இதன் மூலம் மாணவர்கள் நேரம் தாழ்த்தி செல்வதும்பாட நேரத்தில்கட் அடித்துவிட்டு ஊர் சுற்றுவதும் தடுக்கப்படும்இதை விட மேலானது,பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்துகிறது.இதன் மூலம் மாணவர்கள்ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது...என்ற நிலை உருவாகி உள்ளது.

 பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றபின்பு பல்வேறு மாற்றத்தை கொண்டு வருகிறார்அவர் கொண்டு வரும்அனைத்து திட்டமும் கல்வித்துறையில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்துஉள்ளதுஅதற்கு அடுத்தப்படியாக தற்போது செங்கோட்டையன் கொண்டுவந்துள்ள இந்த சிறப்பு திட்டம் மூலம் பெற்றோர்கள் பெரும் மகிழ்ச்சிஅடைந்தது மட்டுமல்லாமல் பெருமூச்சு விடுகின்றனர்.