பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:



திருக்குறள்:74

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

உரை:

அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்அஃதுஎல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.
பழமொழி :

Death keeps no calendar

ஆறிலும் சாவு நூறிலும் சாவு

பொன்மொழி:

நாமும் வாழ்ந்து,
பிறரையும் வாழ
வைப்பதுதான்
பொதுவான சட்டத்தின்
அடிப்படை.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம்தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.மோகன்தாஸ் காந்திக்கு ”மகாத்மா” என்ற பட்டம் அளித்த்தாககூறப்படுபவர்?
ரவீந்திரநாத் தாகூர்

2.தாமிர தாது அதிகம் உள்ள மாநிலம்?
ராஜஸ்தான்

நீதிக்கதை


காகமும் நாய்க்குட்டியும் - நீதிக் கதைகள்

(Crow and Dog Moral Story)



ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க்குட்டி காகத்துடன் நட்பாக இருந்ததுஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன்அமர்ந்திருந்ததுஇதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.

என்ன காக்கையாரேஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்என்றுகேட்டது.

அதற்கு காகம்மனிதர்கள் மற்றப் பறவைகளை அன்புடன்வளர்க்கின்றார்கள்அவைகளின் செயல்களைப் பாராட்டுகின்றார்கள்ஆனால் என்னை வெறுத்துகல்லால் எறிந்து துரத்துகிறார்களே ஏன்என்றுகேட்டது காகம்.

இதற்குக் காரணம் உங்கள் தீய குணங்கள்தான்இதை நீங்கள் இல்லாதுசெய்தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள்என்றது நாய்க் குட்டி

எங்களிடம் அப்படியென்ன தீய குணங்கள் உள்ளனகடைமைசுத்தம்,இப்படிப் பல நல்ல குணங்களில் நாங்கள்தான் சிறந்தவர்கள்!என்றுசொன்னது காகம்.


உண்மைதான்என்றது நாய்க் குட்டி

பகிர்ந்துண்ணும் பண்பைக் கற்றுத்தந்ததும் நாங்கள்தான்என்றுபெருமையோடு சொன்னது காகம்.

ஆமாம் அதுவும் உண்மைதான்என்று மறுபடியும் சொன்னது நாய்க்குட்டி.

இப்படி நல்ல குணங்கள் எம்மிடம் இருந்தும்மற்றப் பறவைகளுக்கு உள்ளமதிப்பு எங்களுக்கு இல்லையே ஏன்?

குயில் கூவும்போது அதன் இனிமையை இரசிக்கிறார்கள்மயிலாடும் போதுஅதை இரசித்துப் பாராட்டுகிறார்கள்கிளியை வீட்டில் வளர்த்து பேசக்கற்றுக் கொடுக்கிறார்கள்.அனால் எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தும்எம்மினத்தைக் கண்டாலே துரத்துகிறார்களே ஏன்என்று மீண்டும் கேட்டதுகாகம்.

ஏன் என்று நான் சொல்லுகிறேன்உங்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள்இருந்தாலும்உங்களிடம் இருக்கும் சில தீய குணங்களால் தான் மனிதர்கள்உங்களை வெறுக்கிறார்கள்என்று கூறியது நாய்க்குட்டி

அப்படி என்ன தீய குணங்கள்என்று கேட்டது காகம்.

திருடுதல்ஏமாற்றுதல்என்று சொன்னது நாய்க்குட்டிகாகம் தலைகுனிந்தது.

நீதிஒருவரிடம் எவ்வளவு நல்ல பண்புகள் இருந்தாலும்அவரின் ஒரு சிறுதீயசெயல் அவரைஅவரின் அத்தனை நல்ல பண்புகளில் இருந்தும் மறைத்துஅந்தத் தீயசெயலே முன்னிற்கும்.

இன்றைய செய்தி துளிகள்:

1.ஸ்டெர்லைட் ஆலை மூடல் எதிரொலி...... தூத்துக்குடியில் காற்று மாசுகுறைந்துள்ளதுமாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை

2.தமிழகத்தில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி:அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

3.உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலிசிவகாசியில் பட்டாசு விற்பனை மந்தம்

4.வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் உருவாகவில்லை:வானிலை மையம்

5.ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிஅரைஇறுதியில்ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது இந்தியா