Wednesday, October 31, 2018

School Morning Prayer Activities - 01.11.2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:77

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.

உரை:
எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவதுபோல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.
 
பழமொழி :

Desire according to your limitaions

பாய்க்குத் தக்கபடி காலை நீட்டு
 
பொன்மொழி:

எவன் ஏழைகளுக்கு
கடன் தருகிறானோ,
அவனுக்கு
கடவுளிடமிருந்து
வட்டி கிடைக்கும்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம்தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.சிங்கப்பூரின் தலைநகர்?
சிங்கப்பூர் சிட்டி

2.தமிழ்நாடு அரசு சின்னம்?
ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம்இரண்டு இந்திய தேசியக் கொடிகள்,வாய்மையே வெல்லும்
 
நீதிக்கதை

வேலை இழந்த அரண்மனை சேவகர்கள்!


ஒருநாள் காலையில் அக்பரும்பீர்பாலும் அரண்மனை முற்றத்தில் நின்றுகொண்டிருந்தனர்சூரியனுடைய பொன்னிறக் கதிர்கள் பட்டதால்யமுனைநதி தனி அழகுடன் விளங்கியதுதங்கத்தை உருக்கி வார்த்ததைப்போல்யமுனை நதி ஓடிக்கொண்டிருந்தது.

இந்த அழகிய காட்சியைக் கண்டு ரசித்தவாறு வெகுநேரம் தம்மை மறந்துநின்று கொண்டிருந்தார் அக்பர்.
அப்போது திடீரென்று, “மகாராஜாமகாராஜாதிருடன் என்பொருள்களைக் கொள்ளையடித்துக் கொண்டு போகிறானேஉங்கள்கண்ணெதிரிலா இந்த அக்கிரமம் நடைபெறுவது?” என்று ஒரு கூச்சல்கேட்டது.

சக்கரவர்த்தி திடுக்கிட்டவாறுகுரல் வந்த திசையை நோக்கினார்.
அரண்மனைக்கு வெளியே திருடர்கள் நாலைந்து பேராகச் சேர்ந்து ஒருவனைஅடித்து அவனிடமிருந்து பொருள்களை அபகரித்துச் சென்றதைப் பார்த்தார்.
இதைப் பார்த்ததும் அவருக்கு ஆத்திரம் அதிகமாகியது.

நம் எதிரிலேயே இந்த அக்கிரமம் நடை பெறுவதா?” என்று வருந்தினார்.
உடனேசேவகர்களில் சிலரை அனுப்பி அந்தத் திருடர்கள் எங்கிருந்தாலும்அவர்களைப் பிடித்து வருமாறு உத்தரவிட்டார் அக்பர்.

சிறிது நேரம் சென்றதுசேவகர்கள் வெறுங்கையுடன் திரும்பினர்.
நாங்கள் செல்வதற்குள் திருடர்கள் ஓடிப் போய் விட்டனர்,” என்றுசக்கரவர்த்தியிடம் கூறினர் சேவகர்கள்.
இதைக்கேட்ட அக்பர் மேலும்கோபமடைந்தார்.

ஒன்றுக்கும் பிரயோசனம் இல்லாதவர்கள்அரண்மனை எதிரிலேயேகொள்ளையடித்துக் கொண்டு போகிறார்கள் பார்த்துக் கொண்டுபேசாமல்தானே இருந்திருக்கிறீர்கள்இப்போது அந்தத் திருடர்களையும்விட்டுவிட்டுப் பொம்மைகளைப் போல் வந்து நிற்கிறீர்கள்நீங்கள் சேவகர்வேலைக்கு அருகதையற்றவர்கள்மாடு மேய்க்கத்தான் நீங்கள் லாயக்குஎன்முன்னே நிற்காதீர்கள்வெளியே செல்லுங்கள்” என்று அவர்களைஅரண்மனையிலிருந்து விரட்டி விட்டார்.
வேலை இழந்த சேவகர்கள் பட்டினியால் பெரிதும் வருந்தினர்.

பீர்பாலிடம் சென்று நம் துயரத்தைக் கூறினால் அவராவது அரசரின் மனதைமாற்றி நம்மை மீண்டும் வேலையில் சேர்த்து விடுவார்” என்றநம்பிக்கையுடன் வேலை இழந்த சேவகர்கள் பீர்பாலிடம் சென்றனர்.
ஐயாநாங்கள் ஒரு தவறும் செய்யவில்லைஎதிர்பாராதவிதமாக நடந்துவிட்ட செய்கைக்காக சக்கரவர்த்தி எங்களை வேலையிலிருந்து நீங்கிவிட்டார்வேலை கிடைக்காததால்நாங்கள் பெரிதும் துன்பப்படுகிறோம்.நீங்கள்தான் அரசரிடம் கூறி எங்களை மீண்டும் வேலையில் சேர்த்துக்கொள்ளுமாறு கூற வேண்டும்,” என்றனர்.

என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன்,” என்று கூறிவிட்டுஅரண்மனைக்குச் சென்றார் பீர்பால்.
பீர்பால் சென்றபோது கூட சக்கரவர்த்தி ஆழ்ந்த கவலையில் இருந்தார்.வழக்கமாகபீர்பால் வரும்போதே புன்சிரிப்புடன் அவரை வரவேற்கும்சக்கரவர்த்திஅன்று வழக்கத்திற்கு மாறாக மவுனமாக இருந்தார்சற்றுநேரம்சென்றதும்அவரே பேசத் தொடங்கினார்.

Akbar and Birbal at Palace
அரண்மனை எதிரில் நம் கண் முன்னாலேயே திருட்டுநடைபெற்றிருக்கிறதேஇங்கேயே இவ்வாறு இருந்தால்மற்ற இடங்களில்இன்னும் எவ்வளவு மோசமாக இருக்கும்?” என்று பீர்பாலிடம் கூறினார்அக்பர்.

அரண்மனை அருகே திருட்டு நடைபெற்று விட்டதால்நாடு முழுவதும்திருட்டும்கொள்ளையும் நிறைந்திருக்கும் என்று நினைக்கக் கூடாதுதங்கள்ஆட்சியில் திருட்டும்கொள்ளையும் இல்லாமல் மக்கள் மகிழ்ச்சியாகவாழ்கின்றனர் என்று வெளிநாட்டிலிருந்து வந்தவர்களே தங்களைப்பாராட்டியிருக்கின்றனர்அவ்வாறு இருக்கும் போது இல்லாத ஒன்றைஇருப்பதாக நினைத்து ஏன் கவலை கொள்கிறீர்கள்?” என்றார் பீர்பால்.

வெளிநாட்டவனுக்கு நம் நாட்டைப் பற்றி என்ன தெரியும்ஏதோஓரிடத்தில் பார்த்து விட்டு நம் மனம் மகிழ்ச்சியடையவேண்டுமென்பதற்காகஅவர்கள் அவ்வாறு கூறியிருக்க வேண்டும்.அதையெல்லாம் நாம் உண்மையென்று எடுத்துக் கொள்ளலாமா?” என்றார்அக்பர்.

அப்போது மாலை மறைந்து இருள் பரவத் தொடங்கியது.
அரண்மனையிலுள்ள பணியாள் ஒருவன் வந்து பேரரசரின் அறையிலுள்ளவிளக்குகளை எல்லாம் ஏற்றினான்அரசரின் பக்கத்தில் உயரமான மேடைஒன்றின் மீது ஒரு பெரிய விளக்கு இருந்ததுஅதையும் ஏற்றினான் அந்தப்பணியாள்பணியாள் விளக்கை ஏற்றியதும் அறை முழுவதும் ஒளி பரவியது.

இதனைப் பார்த்த பீர்பால், “அரசேஇந்த விளக்குக் கம்பத்தின் கீழேபாருங்கள்இருளாக இருக்கிறதுஆனால்இந்த விளக்கின் வெளிச்சம்அறை முழுவதும் பரவியிருக்கிறது,” என்றார்.
எதற்காக இதைக் கூறுகிறாய்?” என்றார் அக்பர்.

அந்த விளக்கைப் போல்தான் நம் அரண்மனை விவகாரமும்இங்கிருந்துபரவும் ஒளி நாடு முழுவதும் பரவிக் கொண்டிருக்கிறதுவிளக்கின் கீழேஇருள் இருப்பதால்நாடு முழுவதும் இருளாக இருக்கும் என்று நினைத்துக்கொள்ளக் கூடாது,” என்றார் பீர்பால்.
ஆம்நீ கூறுவது உண்மைதான்!” என்றார் அக்பர்.

அவ்வாறு இருக்கும்போது அந்தச் சேவகர்களை மீண்டும் வேலைக்குவைத்துக் கொள்வதில் எவ்விதத் தவறும் இல்லை அல்லவா?” என்றார்பீர்பால்.
இதற்காகத்தான் இவ்வளவு தூரம் சுற்றி வளைத்து விஷயத்துக்கு வந்தாயா?நாளை முதல் மறுபடியும் அவர்கள் வேலைக்கு வரலாம்,” என்றார் அக்பர்.
பீர்பால் அவருக்கு நன்றி கூறிவிட்டுசேவகர்களிடம் சென்று, “நாளை முதல்நீங்கள் எப்போதும்போல் வேலைக்கு வரலாம்!” என்றார்.

இதைக் கேட்டதும்சேவகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்அதே சமயம்,பீர்பாலுக்கும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.
 
இன்றைய செய்தி துளிகள்:


1.வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போக்குவரத்துதொழிற்சங்கங்கள் முடிவு...

2.உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியலில்இந்தியா முன்னேற்றம்

3.இந்திய ஒற்றுமைக்கான அடையாளமாக சர்தார் பட்டேல் சிலைஎன்றென்றும் திகழும்பிரதமர் மோடி

4.கடலோர மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவ மழைதொடங்கும்

5.தோனியின் மின்னல்வேக ஸ்டம்ப்பிங் உலக சாதனை

No comments:

Post a Comment

SSLC STUDY MATERIAL

PLUS TWO STUDY MATERIAL

SSLC TIME TABLE 2013-2014

PLUS TWO TIME TABLE 2013-2014

DSE NEW STUDY MATERIAL – CHENNAI

DSE- NEW STUDY MATERIAL –CHENNAI

SSLC HALF YEARLY KEY ANSWERS 13-14

+2 HALF YEARLY KEY ANSWERS 13-14

SSLC OLD DSE MATERIAL

PLUS TWO OLD DSE MATERIAL

SSLC EXAM TIPS

PLUS TWO EXAM TIPS

SSLC NEW STUDY MATERIAL

+2 NEW STUDY MATERIAL

SSLC OLD STUDY MATERIAL

+2 OLD STUDY MATERIAL

SSLC QUESTION PAPERS

PLUS TWO QUESTION PAPERS

SYLLABUS(UP DATED SOON)

SYLLABUS

உங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com

TAMILAGAASIRIYAR ANDROID APP

TAMILAGA ASIRIYAR Headline Animator

JOIN - TEAM TAMILAGAASIRIYAR

நமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.

நண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம்! www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்


join face book :
https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcTcAYOyioELqDvJ8QjJ176Yaje7MihRaAlj3dF56_XBBbGU6NmGiwthank you!