இவ்வாண்டு முதல் 10,11,12 ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வு நாமினல் ரோல் தயாரிக்கும் பொழுது அது சார்ந்த தகவல்கள் திரட்டப்படுவது அரசின் EMIS வலைதளம் மூலமே நடந்தன.


எனவே 10,11,12 ஆம் வகுப்பிற்கான மாணவர்கள் EDIT வசதி நிறுத்தப்பட்டு இருந்தது, ஆனால்+1 மாணவர்களின் பதிவில் பல்வேறு மாற்றங்கள் செய்யவேண்டி உள்ளதால் EMIS ல் EDIT வசதி செய்யப்படவேண்டும் என பல்வேறு பள்ளி தலைமை ஆசிரியர்களிடமிருந்து வந்த கோரிக்கையை ஏற்று 10.11.2018 ஒருநாள் மட்டும் +1 மாணவர்களுக்கு மட்டும்EMIS ல் EDIT வசதி செய்யப்படஉள்ளது. இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் +1 மாணவர்களின் பதிவில் திருத்தங்கள் செய்து மாணவரின் தகவல்களை நிகழ்நிலைக்கு கொண்டுவர கேட்டுக்கொள்ளப்படுகிறது