மயிலாடுதுறை அருகே உள்ள கொருக்கை

அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கள் ஊரின் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராமவாசிகளிடம் கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தன்னார்வத்தோடு நிதி மற்றும் நிவாரணப்பொருட்களை திரட்டினர் கருணை பேரிடர் நிவாரணக்குழுவினரிடம் சேர்த்தனர். அவர்களின் இச்செயலில் நெகிழ்ச்சியுற்ற அக்குழுவினர் தங்களது குழுவினரால் திரட்டப்பட்ட நிதியையும் சேர்த்து, நாகை & புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பொருட்களாக கொண்டு சேர்த்தனர். (கருணை பேரிடர் குழுமம்: மு.தங்கபாண்டியன், பட்டதாரி ஆசிரியர்(ஆங்கி), கம்பர்GHSS, தேரிழந்தூர். தே.கிளிண்டன், தனியார் நிறுவன ஊழியர், கும்பகோணம், சு.பாபு பட்டதாரி ஆசிரியர்(ஆங்கி), GHSS, கொருக்கை.