பொதுத்தேர்வு வினாத்தாள்களை இறுதி செய்யும் பணிகள் தீவிர மாகியுள்ளனமாணவர்களை தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் விதமாக வினாத் தாள்கள் வடிவமைக்கப்பட் டுள்ளதாக தேர்வுத் துறை அதிகாரி கள்தெரிவித்தனர்


தமிழகத்தில் சமச்சீர் பாடத் திட்டத்தின்கீழ் 10, 11, 12-ம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது

இதில் பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதுமானது. இதர 10, 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்றால் மட்டுமே மாணவர் களின் அடுத்தகட்ட உயர்படிப்பு களுக்கு உதவியாக இருக்கும்

இந்தச் சூழலில் மாணவர்கள் தேர்வுக்கு முன்கூட்டியே தயாரா கும் விதமாக பொதுத்தேர்வு தேதிகளும் கடந்த ஜூன் 12-ம் தேதியே அறிவிக்கப்பட்டனஅதன் படி 12-ம் வகுப்புக்கு மார்ச் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். தேர்வுமுடிவு ஏப்ரல் 19-ம் தேதி வெளியிடப்படும்11-ம் வகுப்புக்கு மார்ச் 6-ல் தொடங்கி 22-ம் தேதி வரை தேர்வு கள் நடைபெற உள்ளனதேர்வு முடிவு மே 8-ல் அறிவிக்கப்படும். இதுபோல, 10-ம் வகுப்புக்கு மார்ச் 14-ம் தேதி தொடங்கி 29-ம்வரை தேர்வுகள் நடைபெறும்முடிவுகள் ஏப்ரல் 29-ம் தேதி வெளியிடப்படும். அதாவது மார்ச் மாதத்திலேயே பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, மே முதல் வாரத்துக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன

இதற்கிடையே பள்ளிக் கல்வி யில் புதிய பாடத்திட்டம், தேர்வு முறை மற்றும் நிர்வாக ரீதியாக பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றனஅந்த வகையில் 10 முதல் 12 வரையான பொதுத்தேர்வு வகுப்புகளுக்கு தேர்வுகளில் 20 சத வீதம் வரை பாடத்துக்கு வெளி யில் இருந்து கேள்விகள் கேட்கப் படும். பாடங்களுக்கு ப்ளூபிரிண்ட் தரப்படாதுஅதற்கேற்ப மாணவர் களை, ஆசிரியர்கள் தயார்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட அறி விப்புகளை வெளியிட்டு கடந்த ஜூன் முதலே பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்தி வருகிறதுதேசிய நுழைவுத் தேர்வு களுக்கு மாணவர்களை தயார்படுத் தும் விதமாக தேர்வு முறைகளில் கடும் கெடுபிடிகளைப் பின்பற்று வதாக அரசு தரப்பில் கூறப்பட் டதுஅதற்கேற்ப காலாண்டு, அரை யாண்டு தேர்வு வினாத்தாள்களும் மிக கடினமாகவே வடிவமைக் கப்பட்டன

விபரங்கள் சேகரிப்பு

இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர், புகைப்படங்கள் உள்ளிட்ட விவரங் களை சேகரிக்கும் பணிகள் முடிந்துவிட்டனஇதையடுத்து பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கானவினாத்தாள் பட்டியலை தேர்வுத் துறை இப் போது இறுதி செய்துள்ளதுஇதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவதுமாநிலம் முழுவதுமுள்ள பள்ளிகளில் பணியாற்றும் திறமையான ஆசிரி யர்கள் மூலம் பாட வாரியாக வினாத் தாள்கள் வடிவமைக்கப்பட்டன.

ஒவ்வொரு பாடத்துக்கும் 10 முதல் 15 வினாத்தாள்கள் தயாரிக் கப்பட்டுள்ளன இப்போது வினாத்தாள்களை இறுதி செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன இன்னும் ஒரு வாரத்தில் வினாத்தாள்கள் இறுதி செய்யப்பட்டு, அச்சிடுதல் பணிக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த ஆண்டு பொதுத் தேர்வு வினாத்தாள்கள் கடினமாகவே இருக்கும்ஏற்கெனவே குறிப்பிட் டதுபோல, எல்லா பாடங்களிலும் மாணவர்களின் நுண்ணறிவை சோதிக்கும் வகையிலான கேள்வி களே அதிகம் இடம்பெறும்மறைமுக கேள்விகள்எனவே, புத்தகத்தில் உள்ள மாதிரி வினாக்களை மட்டும் படிக் காமல் மாணவர்கள் பாடங்களின் அனைத்து பகுதிகளையும் படிக்க வேண்டும். மேலும், முக்கிய பாடங் களில் நேரிடையாக இல்லாமல் மறைமுகமாக கேள்விகள் கேட்கப் பட்டுள்ளனஅதற்கேற்ப மாணவர் களை தயார்படுத்த ஆசிரியர் களுக்கும் ஆலோசனை வழங்கி யுள்ளோம். இதன்மூலம் நமது மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்வார்கள்இவ்வாறு அவர்கள் கூறினர்.